#BREAKING : மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஓபிஎஸ்-க்கு சம்மன்..! – ஆறுமுகசாமி ஆணையம்

Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இவரது மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.  தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21 ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவியும் இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்