#BREAKING : ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு…!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் சலசலப்பு நிலவி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் சென்கிட்டையன் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.