அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார் என தகவல்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று மக்களவை சபாநாயகருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகருக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தில் தற்போது இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல் இதுதொடர்பாக தேர்தல் ஆணியத்திடமும் நாங்கள் முறையிட்டு உள்ளோம். ஆகவே, ஈபிஎஸ் சார்பாக கொடுக்கப்பட்ட இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை நீக்கிய கடிதம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார் என்றும் கூறப்படுகிறது. மக்களவை ஆவணங்களில் ஓபி ரவீந்திரநாத் அதிமுகஎன்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் இருந்து வருகிறார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…