#BREAKING : ஓபிஎஸ் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது – அதிமுக போலீசில் புகார்
திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது என அதிமுக காவல் நிலையத்தில் புகார்.
திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் மாநாடு நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டை நடத்த அனுமதிக்க கூடாது என அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக புகார்
திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மாநாட்டில், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஓபிஎஸ் தரப்பில், அதிமுக கொடி மற்றும் சின்னதை பயன்படுத்துவோம் என தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த நிலையில், இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.