#BREAKING : அண்ணாமலையுடன் ஓபிஎஸ் சந்திப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு.
பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகமான கலாமலாயத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஈபிஎஸ் தரப்பு சந்திருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தரப்பு சந்தித்துள்ளது.