#BREAKING : ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது – சபாநாயகர்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு கடிதம். 

கடந்த சில தினங்களுக்கு முன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு ஈபிஎஸ் தரப்பில் கடிதம் அனுப்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் இருப்பதால் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது. ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக ஈபிஎஸ்-யிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. எதிர்க்கட்சி துணை தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என ஓபிஎஸ் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னமும் ஆளுநரிடமிருந்து நீட் மசோதாவுக்கு சரியான பதிலில்லை. குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் என நம்புகிறோம்; சட்டமன்றத்தின் மரபுப்படி தீர்மானத்திற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் மக்களை புறக்கணிக்கின்ற செயலாகத்தான் இதை கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்