#BREAKING : சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து,அதிமுக பொருளாளர் என்ற முறையில் இனி காசோலைகளில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே கையெழுத்திடுவார் என வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்,வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்று தனது கடிதத்தில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,அதிமுக பொருளாளராக தான் இருப்பதால்,தன்னை கேட்காமல் எந்தவொரு வரவு-செலவு கணக்குகளையும் யாரிடமும் ஒப்படைக்க கூடாது எனவும்,அதிமுக கணக்குகளை யாரும் கையாள அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கணக்கு வைத்துள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஈபிஎஸ் நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் இருப்பதால் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.