அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார்.
மேலும்,இதனையடுத்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15-க்கு கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.இந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு மேடையிலிருந்து பாதியிலேயே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.குறிப்பாக,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது.
இதனிடையே,டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.அதில்,அதிமுகவில் சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாகத்தான் வரும் ஜூலை 11 அன்று சட்டவிரோதமாக பொதுக்குழுவிற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக எந்தவித அனுமதியும் பெறவில்லை,இதன் காரணமாக அந்த 11 ஆம் தேதி பொதுக்குழு நடத்த அனுமதிக்க கூடாது என்றும் சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.அதே நேரத்தில் இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,தனது ஆதரவாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணி,எஸ்பி வேலுமணி,சிவி சண்முகம்,ஆர்பி உதயகுமார்,கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…