#Breaking:நாளை தமிழக ஆளுநரை சந்திக்கும் ஓபிஎஸ் & ஈபிஎஸ்…!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திக்கின்றனர்.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.குறிப்பாக,கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,பேரவையை இரண்டு நாட்கள் அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,கோடநாடு வழக்கில் தன்னையும்,அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திக்கின்றனர்.
அதன்படி,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில்,பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,”கோடநாடு வழக்கில் அரசியல் தலையீடு இல்லை,பழிவாங்கும் எண்ணமோ இல்லை. மாறாக,நீதிமன்ற தீர்ப்பின்படியே விசாரணை நடைபெறுகிறது. அதன்படி, உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.