#BREAKING: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனு தள்ளுபடி – செப்டம்பர் 14ம் தேதி ஆஜராக உத்தரவு!
புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மனு தள்ளுபடி.
பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் செப்டம்பர் 14ம் தேதி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுகவில் இருந்து நீக்கி அறிக்கை விட்டதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக புகழேந்தி வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூர் புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து இருந்தது தொடர்பாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார்.