தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.குறிப்பாக,கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,பேரவையை இரண்டு நாட்கள் அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,கோடநாடு வழக்கில் தன்னையும்,அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில்,பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,”கோடநாடு வழக்கில் அரசியல் தலையீடு இல்லை,பழிவாங்கும் எண்ணமோ இல்லை. மாறாக,நீதிமன்ற தீர்ப்பின்படியே விசாரணை நடைபெறுகிறது. அதன்படி, உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர்.அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர்.
ஆளுநரிடம் கோடநாடு விவகாரம் தொடர்பாகவும்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிஇடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அவர்கள் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…