ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு, நேற்று விசாரிப்பதாக இருந்து இன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஒற்றை நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட கூடாது என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு இன்று ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல், தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ், ஆதரவாளர்கள் மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் நாளை விசாரிக்க உள்ளனர். ஏற்கனவே நேற்று விசாரிப்பதாக இருந்து இன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் வழக்கு நாளை விசாரணை
ஓபிஎஸ் மனு மட்டும் இன்று பட்டியலிடப்பட்டு இருந்தது. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரின் மனுக்கள் இன்று பட்டியலிடப்படவில்லை. இந்த நிலையில், மூன்று பேரின் முறையீட்டை ஏற்று, நாளை இந்த மனு விசாரிக்கப்பட உள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…