#BREAKING : ஓபிஎஸ் வழக்கு – மூத்த நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் அவசர ஆலோசனை..!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட இன்று முதல் நாளை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாளை எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை நாளை காலை 10 மணிக்கு விசாரிக்கின்றனர்.
இபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி, ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில் ஆலோசனை மேற்கொண்டுளள்னர்.