#BREAKING: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் சகோதரர் உள்பட 37 பேர் நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

Default Image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேற்று சந்தித்து பேசினார். சசிகலாவை அதிமுகவின் இணைக்க வேண்டும் என ஒருபக்கம் ஆதரவு, மறுபக்கம் எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில், நேற்று திருச்செந்தூர் சென்றிருந்த சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் சந்தித்து பேசினார். தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே சசிகலாவை சேர்க்கக்கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சி தலைமை நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட எஸ்.முருகேசன், வைகை கருப்புஜி, எஸ். சேதுபதி ஆகியோர் கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணங்களால் தேனி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 23 பேர், தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும், தேனி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மேலும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் சகோதரர் உள்பட மொத்தம் 37 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்