#BREAKING: மன்னிப்பு கோரிய ஓபிஎஸ் – மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மன்னிப்பு கோரிய ஓபிஎஸ்  தரப்பு, மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கூறியதாக கூறப்பட்டது. அப்போது, தங்கள் முன்பே வாதிட விரும்புகிறோம், நடந்தது நடந்ததாக இருக்கட்டும், திறந்த மனதோடு வழக்கை நடத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நீதிபதியிடம் மன்னிப்பு கோரியதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதி தெரிவித்திருந்த கருத்துக்களை சுட்டிக்காட்டிய கோரிக்கை வைத்தோம் என்றும் கூறியுள்ளனர். இதன்பின், 2 நாட்களுக்கு முன்பு என்னிடம் முறையிட்டு இருந்தால் நானே விலகி இருப்பேன் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு இரண்டு முறை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருந்தனர். இந்த நிலையில், மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்ததை தொடர்ந்து, நீதிபதியை மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்று, மனு தாக்கல் செய்த பிறகு அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

9 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

14 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

19 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

41 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

58 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago