ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி தொண்டர்கள் ஏற்பார்கள் என அதிமுக அலுவலகம் சென்ற ஈபிஎஸ் பேட்டி.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, ஈபிஎஸ்-யுடன் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், வைத்திலிங்கம், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதன்பின் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலகத்தில் இருந்த அதிமுகவுக்கு சொந்தமான பத்திரங்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்கால நம்மை கருதி அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை வேண்டும் என இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும்.
பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தேவை என முடிவு எடுக்கப்பட்டது. அதிமுகவில் பிளவு கிடையாது. ஒரு சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டது காரணமாக பொதுக்குழு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி தொண்டர்கள் ஏற்பார்கள். கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கும்போது, திமுகவுக்கு உடந்தையாக இருக்கும்போது தொண்டர்கள் எப்படி மன்னிப்பார்கள். புனிதமான தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தி கீழ்த்தரமான வேளையில் ஓபிஎஸ் ஈடுபட்டார். பச்சோந்தியை விட அதிக கலர் மாறுவார் ஓபிஎஸ்.
ஜெயலலிதாவுக்கோ, அதிமுகாவுக்கோ அவர் விசுவாசமாக இருந்ததில்லை. சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியை எதிர்த்து வாக்களித்தவர் ஓபிஎஸ் என குற்றசாட்டிய ஈபிஎஸ், எப்போது எல்லாம் சோதனை வருகிறதோ அப்போது எல்லாம் தொண்டர்களின் உதவியுடன் அதை முறியடித்துள்ளது அதிமுக என கூறினார். இதன்பின் பேசிய அவர், போதைப்பொருளை விற்பதே திமுகவினர் என்பதால்தான் அதை கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை.
மேலும், ஒரு அதிமுக எம்எல்ஏவை கூட திமுகவால் அசைக்க முடியவில்லை, அதிமுகவை யாரும் குறைச்சு மதிப்பிட முடியாது. ஆர்.எஸ்.பாரதியை தேர்தலில் நிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு என்றும் விமர்சித்தார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…