#BREAKING: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு
- ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
- உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.இது தொடர்பாக வழக்கு விசாரணைகளும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இதற்கு மத்தியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்து.ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கரூரை சேர்ந்த வாக்காளர் முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது வழக்கில் தொகுதி மறுவரையரை செய்யக் கோரியும் , மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடர்ந்துள்ளார்.