#Breaking : உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் புதிதாக 6 வழக்குகள்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.உச்சநீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.அந்த வழக்கில்,டிசம்பர் 2-ஆம் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.மேலும் டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பானை வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
இதனால் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.ஆனால் இதற்கு இடையில் தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிதாக மாவட்டங்களை பிரித்தால் எப்படி தேர்தல் நடத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிதாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் சார்பாக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.இந்த மனுவில்,புதிய மாவட்டங்களில் தொகுதி வரையறை செய்யாமல் தேர்தலை நடத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்றும் வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்ய உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.