#BREAKING: மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு ! உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு
- மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
- மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.1986- ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், 2006-ஆம் ஆண்டு மறைமுக தேர்தல் முறையும் பின்பற்றப்பட்டது. கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.
தற்போது தமிழக அரசு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது.மேலும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தது.
இந்த முறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடுத்துள்ளார்.அவரது வழக்கில்,மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.