#BREAKING: நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு – தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர்!
மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. CUET நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறையும் என்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்வது ஏற்புடையது அல்ல எனவும் தெரிவித்தார். மேலும், நுழைவுத்தேர்வு முறை பள்ளி கல்வி முறையை ஓரங்கட்டி, பயிற்சி மையங்களை நாடவேண்டிய தேவையை ஏற்படுத்திவிடும் என்றும் குறிப்பிட்டார்.