#BREAKING : குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு- திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
- குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.பின்பு குடியரசு தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் மட்டும் அல்லாமல் நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளது.ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மக்கள் நீதி மையம் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது