#BREAKING : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழமிசாமி கார் மீது காலனி வீசியவர் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசிய, சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் 5-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
அப்போது, அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற கார் மீது செருப்பு வீசியதாக அமமுகவினர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் அவர்களின் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் செருப்புகளை வீசியதாகவும். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசிய, சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025