#BREAKING : ஆன்லைன் ரம்மி – அரசு சட்டம் இயற்றியதில் என்ன தவறு..? – உயர்நீதிமன்றம்
தன் மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது, ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பினார்.
ஆளுநர் ஒப்புதல்
அதனை தொடர்ந்து, இரண்டாவது முறை சட்டப்பேரவையில் ஆனால்சின் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, தமிழக அரசு, ஆனால்சின் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்காக குழு ஒன்றை ஏற்படுத்தியது.
ஆன்லைன் ரம்மி பாதுகாப்பானது தான்
இந்த நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் வரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விதிகளை வகுத்து அதற்கான அதிகாரிகளை நியமித்துள்ள நிலையில் மாநில அரசு ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை.
மேலும், கிளப்புகளில் சென்று நேரடியாக ரம்மி விளையாடுவதை விட, ஆன்லைன் ரம்மி பாதுகாப்பானது தான். லாட்டரி, மது, குதிரை பந்தயத்தை தடை செய்யவில்லை. ரம்மி மட்டும் சமூக கேடாக பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு இணைய வழி சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தகுதி இல்லை
இதுகுறித்து தமிழக அரசு தரப்பு வாதத்தில், கணவர்கள் பணத்தை வீணடிப்பதாக அவர்களின் மனைவிகள் கண்ணீர் வடிக்கிறார்களே, நிறுவனங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிப்பதால் அந்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணைய வழி சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது
இந்த நிலையில், இந்த விவாதங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ‘ தன் மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் லாட்டரி, குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது தெரிந்து கொள்ளுங்கள். மதுரை அருகே எனது ஊரான தென்னூரில் சிகரெட்டு, மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னூரை மாதிரி மாதிரி கிராமமாக மதுரை காந்தி அருங்காட்சியகம் தேர்வு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.