ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில்,தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.மேலும், இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன்,ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் குழுவில் காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடேவும் இடம்பெற்றுள்ளார்.இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்ட விரைவில் இயற்றப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும்,ஆன்லைன் விளையாட்டுக்கள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா? அல்லது அடிமையாக்குகிறதா?,நிதி இழப்பு ஏற்படுகிறதா?, குறிப்பாக தற்கொலைக்கு தூண்டுகிறதா? என்பது குறித்தும் ஆராய வேண்டும்,இது தொடர்பான அறிக்கையை இரு வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…