#BREAKING: ஆன்லைன் வகுப்பு புகார்.., போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை -முதல்வர் அதிரடி

Default Image

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கு குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், இணைய வழி வகுப்புகள் முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதனை உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    • இணையம் வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளி மூலம் பதிவு (record ) செய்யப்படவேண்டும் என்றும் இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இருவரை கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்படவேண்டும்.
    • இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதலை வகுத்து வெளியிட பள்ளிக்கல்வித் துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குனர், கணினி  குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நடத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    • இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு ஹெல்ப்லைன் எண் உருவாக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
    • இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்ற தடுப்புக் (சைபர் கிரைம்) காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்