#BREAKING : ‘விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்’ – முதல்வர் அறிவுறுத்தல் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகளுடன் ஒருநாள் திட்டத்தின்கீழ் ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், மாதம் ஒருநாள் எம்எல்ஏக்கள் ஒரு கிராமத்திற்கு சென்று கருத்து கேட்க முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், விவசாயிகளுடன் ஒருநாள் திட்டத்தின்கீழ் ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.