BREAKING: வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் -தமிழக அரசு .!
கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த்துள்ளார் . இதையெடுத்து தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.1,000 வழங்குவது ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியது.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்பதால், அந்நாளுக்கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.