#BREAKING: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் உறுதி!
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல்.
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 7 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமைக்ரான் தொற்று உறுதியனர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமைக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.