#BREAKING : ‘ஓமைக்ரான் கொரோனா’ – மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த மருத்துவத்துறை செயலர்..!

Published by
லீனா

தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு மருத்துவத்துறை செயலர் அறிவுறுத்தல்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், புதியவகை கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறும், இந்த நாடுகளில்  இருந்து வருவோரை 8 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும், கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும், தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“ஈரான் மீது குண்டு வீசுவோம்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்.!

“ஈரான் மீது குண்டு வீசுவோம்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்.!

ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…

3 minutes ago

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…

1 hour ago

இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…

1 hour ago

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்? அதிமுக கூட்டணிக்கு பாஜக முயற்சி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

2 hours ago

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

3 hours ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

4 hours ago