#BREAKING : ‘ஓமைக்ரான் கொரோனா’ – மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த மருத்துவத்துறை செயலர்..!
தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு மருத்துவத்துறை செயலர் அறிவுறுத்தல்.
தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், புதியவகை கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறும், இந்த நாடுகளில் இருந்து வருவோரை 8 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும், தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.