அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு.
கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி இழப்பை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும் என இழப்பீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஜனவரி 10-ஆம் தேதிக்குள் இழப்பீடு தர திருவாரூர் ஆட்சியர், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோர்ட் கெடு வைத்துள்ளது. ஜனவரி 10-ஆம் தேதிக்குள் இழப்பீடு தராவிடில் சொத்துக்களை ஜப்தி செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருட்களை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆட்சியர் அலுவலகம் மற்றும் மருத்துவமனை தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யும்போது, பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி விஜயகுமாரி வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில், கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…