#breaking: மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை!!
முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி ஆளுநர் மாநிலகையில் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சந்திப்பில் காவல்துறை டி.ஜி.பி திரிபாதியும் பங்கேற்றுள்ளார். இதில், புதிய அரசு பதவியேற்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முக ஸ்டாலினிடம் விளக்கமளித்து வருகின்றனர்.