#Breaking: மு.க.ஸ்டாலினுடன் மீண்டும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மு.க.ஸ்டாலினுடன் மீண்டும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலர், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், ஆலோசனை மேற்கொள்கிறார் முக ஸ்டாலின். இதனிடையே, நேற்று மாலையும் முக ஸ்டாலினுடன் தலைமை செயலாளரும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.