#BREAKING: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை – உயர் நீதிமன்றம் அதிரடி..
நீதிமன்ற உத்தரவை மதிக்காவிடில் சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயல் என்பது பணியில் நேர்மையுடன் செயல்படாததை காட்டுகிறது என்றும் அரசு பதவியை, லஞ்சம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனவும் நீதிபதிகள் கருத்து கூறினார்.
கடமை தவறியதாக சென்னை மாநகராட்சி அதிகாரி தெய்வசிகாமணி பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. விதிமீறல் கட்டங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காத தெய்வசிகாமணிக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தெய்வசிகாமணி தொடர்ந்த வழக்கில் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி மதிக்கவில்லை என தெய்வசிகாமணி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.