Breaking: தமிழகத்தில் என்பிஆர் நிறுத்திவைப்பு… அமைச்சர் உதயகுமார்…

Default Image

தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.என்பிஆர் கணக்கெடுக்கும் பணி துவங்க வேண்டும் என பல மாநிலங்களில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில்  2002 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்.பி.ஆர் விட 2020-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் 3 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 3 அம்சங்கள் தான் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.அந்த மூன்று கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காத நிலையில் தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்