#Breaking:வடகிழக்கு பருவ மழை:10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அரசாணை!

Default Image

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் கண்காணிக்கவும் 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,

  1. திருச்சி – திரு.ஜெ.ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ் (கமிஷனர் பி&இ, சென்னை),
  2. ஈரோடு  – டாக்டர் எஸ்.பிரபாகர், ஐஏஎஸ் (நிர்வாக இயக்குனர், சென்னை),
  3. வேலூர்  – திரு.கே.நந்தகுமார், ஆணையர்,(கல்வி கமிஷனர்,சென்னை),
  4. ராணிப்பேட்டை – டாக்டர் ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ் (பஞ்சாயத்துகள் கமிஷனர்,சென்னை),
  5. நாகப்பட்டினம் -டாக்டர் கே. பாஸ்கரன், ஐஏஎஸ் (தமிழக கடல்சார் வாரியம் -துணைத் தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி, சென்னை)
  6.  கடலூர்,சிதம்பரம் – திரு வி. அருண் ராய், ஐஏஎஸ் ( MS&ME துறை அரசு செயலாளர், சென்னை)
  7. மதுரை – திரு டி.என். வெங்கடேசன், ஐ.ஏ.எஸ் (கருவூலங்கள் மற்றும் கணக்கு கமிஷனர், சென்னை),
  8. திருவள்ளூர் – டாக்டர் ஆர் ஆனந்தகுமார், ஐஏஎஸ் உறுப்பினர்( விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலாளர்) ,
  9. அரியலூர்,பெரம்பலூர் – திரு அனில் மேஷ்ராம், ஐ.ஏ.எஸ் (டிஎன் சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர்),
  10. விருதுநகர் – திரு.சி.காமராஜ், ஐ.ஏ.எஸ் (பிற்படுத்தப்பட்டோர் இயக்குனர், சென்னை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்