சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.
சிங்கார சென்னை 2.O :
சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொதுவெளியில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை பட்டினம்பக்கத்தில், மெரினா லூப் சாலையில் சாலையோரம் மீனவர்கள் மீன் விற்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி மீன் கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
மீனவர்கள் போராட்டம் :
இதனால், அங்குள்ள மீனவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பலர் தங்கள் மீன்களை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மீனவர்களுக்கு உதவியாக மீன் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் எனவும் விற்பனை அங்காடி திறக்காமல், கடைகளை அகற்றினால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்து, படகுகளுடன் சாலை மரியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு தீர்மானம்:
இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், மீனவர்கள் தொழில் செய்ய மெரினா லூப் சாலையை பயன்படுத்துவத்தற்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
ஒழுங்குபடுத்த நடவடிக்கை :
இதனிடையே, மெரினா லூப் சாலையில் மீன்கடைகளை அகற்றும் விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது எனவும் சாலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டம் வாபஸ் :
இதனைத்தொடர்ந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அரசு உறுதியளித்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில் இந்த போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…