#BREAKING: துணைத் தலைவர் பதவியே இல்லை! தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் – சபாநாயகர்

சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும் என சபாநாயகர் விளக்கம்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்பின், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு அங்கீகாரம் இல்லை. சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும்.

எனவே, விதிப்படி துணைத்தலைவர் பதவியே இல்லை என தெரிவித்தார். அலுவல் ஆய்வுக்குழுவில் யாரை சேர்ப்பது என்பது சபாநாயகரின் முழு உரிமை, அதில் யாரும் தலையிட முடியாது. சட்டப்பேரவையில் இந்த இடத்தில் இவரை அமரவைக்க கூடாது என்று வலியுறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அதிமுக ஆட்சியில் கலைஞர் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கை ஒதுக்க அனுமதி மறுக்கப்பட்டது. பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அளித்த கோரிக்கைகள் எனது ஆய்வில் இருந்து வருகிறது என உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக அங்கீகரிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரும் நிலையில், சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்