#BREAKING: ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை – சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம்!
அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று மக்களவை சபாநாயகருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, அதிமுகவில் இருபிரிவாக பிரிந்து பல்வேறு சர்ச்சை, சலசலப்பு என உச்சகட்டமாக உட்கட்சி விவகாரம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி அதிமுகவில் செயற்குழு கூட்டத்தை நடத்தி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதேபோல், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக கிடையாது என சபாநாயகருக்கு கடிதம் எழுந்திருந்தார். இந்த சமயத்தில் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் அதிமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை என்ற கடிதத்தை எழுதியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரவீந்திரநாத் சார்பாகவும் பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் பதில் கடிதத்தில், தற்போது இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல் இதுதொடர்பாக தேர்தல் ஆணியத்திடமும் நாங்கள் முறையிட்டு உள்ளோம். ஆகவே, ஈபிஎஸ் சார்பாக கொடுக்கப்பட்ட இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று சுட்டிகாட்டுயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.