தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழு பாடங்களை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39%, 11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், முழு பாடங்களையும் நடத்த உத்ராவிடப்பட்டது.
இந்த நிலையில், பள்ளிகளைப் போல், கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களிலும் இனி அனைத்து பாடங்களும் முழுமையாக நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்த கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழு பாடங்களையும் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அனைத்து வகையான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 69% இடஒதுக்கீடை பின்பற்ற சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…