#BREAKING: பரிசோதனையில் நெகட்டிவ்.! முதலமைச்சருக்கு கொரோனா இல்லை.!
சற்று முன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது. மக்களிடம் பதற்றம் வேண்டாம்; அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம் என கூறினார். சமீபத்தில் கொரோனா ஒழிவது கடவுளுக்குத்தான் தெரியும் என்ற முதல்வரின் யதார்த்தமான கருத்தில் என்ன தவறு..? யதார்த்தமான கருத்தை முதல்வர் கூறியதால் எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன்..? கோபம் வருகிறது என கூறினார்.
மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.