#BREAKING: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்.!
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். சரண்யா, பரனிஸ்வரன் உள்ளிட்டோரின் வழக்கை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர். ஹேமலதா தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது. விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்கள் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.