#BREAKING: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை!- உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2 ஆம் தேதி எண்ண தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணும் பணியை நிறுத்தக்கோரிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அற்ப காரணங்களுடன் வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரியதும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.