#BREAKING: பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “புரெவி” புயலாக நேற்று உருவானது. இந்த புயல் இன்று மாலை திருகோணமலையை கடக்கும் எனவும் பின்னர், கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பனுக்கு 530 கிலோ மீட்டர் தொலைவில் “புரெவி” புயல் மையம் கொண்டிருப்பதால் பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. பாம்பனில் தற்போது 30 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.
“புரெவி” புயல் முதலில் இலங்கையை கரையை கடக்க உள்ள நிலையில் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் உள்ளதால் துறைமுகம் வழியே புயல் கரைக்க கூடும் வகையில் ஏழாம் எண் கூண்டு தற்போது பாம்பனில் ஏற்றப்பட்டுள்ளது.