#BREAKING: ‘நிவர்’ முடிஞ்சது; உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!
தெற்கு வங்க கடலில் நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தளத்தை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தின் மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களுக்கு மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், வலுவிழந்து தீவிரப் புயலாக புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடந்தது. நேற்று இரவு 11:30 மணி முதல் இன்று அதிகாலை 2:30 மணி வரை புயல் கரையைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.