முகக்கவசம் அணியாதது தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தகவல்.
சென்னையில் இரவுநேர ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்றில் இருந்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் ள்ளிரவில் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
இதில் 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் ஊரடங்கை மீறியதாக கூறி, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதவிர முகக்கவசம் அணியாதது தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரவுநேர ஊரடங்கு காரணமாக சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…