#BREAKING: என்ஐஏ சோதனை – தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் 106 பேர் கைது!
நாடு முழுவதும் நடந்து வரும் அதிரடி சோதனையில் இதுவரை 106 பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 106 பேர் PIF நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 10, ஆந்திராவில் 5, அசாமில் 9, டெல்லியில் 3, கர்நாடகாவில் 20, கேரளாவில் 22, மத்திய பிரதேசத்தில் 2, மகாராஷ்டிராவில் 20, புதுச்சேரியில் 3, ராஜஸ்தானில் 2, உத்தரபிரதேசத்தில் 8 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இன்னும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக ப்ரண்ட் ஆப் இந்தியாவின் முக்கிய நிர்வாகிகள் தான் கைது செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.