பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு :
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதம் 97.3% ஆகும்.
1. ஈரோடு -97.3%
2.திருப்பூர் 96.4% பேர்
3.கோவை 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:
இயற்பியல் – 93 %,
வேதியல் – 92.7%,
உயிரியல் – 92.6%,
தாவரவியல் – 89.3%,
விலங்கியல் -91.8%,
கணிதம் – 92.5%,
கணினி அறிவியல் – 95 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.2,054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
மதிப்பெண்கள் விவரம்:
500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் – 30,380 பேர்
451 – 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 64,817 பேர்
426 – 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 48,560 பேர்
401 – 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 61,369 பேர்
351 – 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 1,60,581 பேர் பெற்றுள்ளனர்.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடியதேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…