கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார் . இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 25 ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் கொடுத்தனர்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர்.போலீசார் நடத்திய விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை நேற்று வெளியானது.வெளியான அறிக்கையில், கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் போலீசார் வழக்கு விசாரணையை தொடர்ந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோவை துடியலூர் ஜங்சனில் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதேபோல் தமிழகம் முழுவதும் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு கொடுத்தால் சன்மானம் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்
இந்நிலையில் போலீசால் இன்று வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை .இதனால் போலீஸ் தரப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதில் கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்றும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்கள் 9498174227 ,9443122744, 9498174226 என்ற தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…