பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
1998ல் பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார் பாலகிருஷ்ண ரெட்டி. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி ஆகும்.
3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார்.அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…